லகான் படத்தில் சின்காரா மான்கள்: அமீர்கான் மீதான வழக்கு தள்ளுபடி

Bookmark and Share

லகான் படத்தில் சின்காரா மான்கள்: அமீர்கான் மீதான வழக்கு தள்ளுபடி

நடிகர் அமீர்கான் ‘லகான்’ என்ற இந்திப் படத்தை சில வருடங்களுக்கு முன்பு தயாரித்து வெளியிட்டார். அதில் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்து இருந்தார். லகான் படத்தில் அரிய வகை சின்காரா மான் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து வன விலங்குகள் சட்டத்தின் கீழ் நடிகர் அமீர்கான் உள்ளிட்ட 4 பேர் மீது குஜராத் வனத்துறை சார்பில் புஜ் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் சின்காரா மான்களை படப்பிடிப்பில் பயன்படுத்தும் போது சித்ரவதை செய்துள்ளனர். வணிக ரீதியாக வன விலங்குகளை பயன்படுத் தக்கூடாது எனவே அமீர்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி குஜராத் ஐகோர்ட்டில் நடிகர் அமீர்கான் உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

லகான் படத்தில் நிஜமான மான்கள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தி காட்சிகள் சித்தரிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.எம்.சஹாய், விசாரித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமீர்கான் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்குகளால் கோர்ட்டு நேரம் வீணடிக்கப்படுவதாகவும், இது மாநிலத்தின் நன்மைக்கு உகந்தது அல்ல என்று கூறி வனத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions