ஷங்கர் படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ஆமீர்கான்?

Bookmark and Share

ஷங்கர் படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ஆமீர்கான்?

ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் படத்தில் ரஜினியுடன் ஆமீர்கானும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரஜினியும் ஷங்கரும் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினர். இது அடுத்த படத்துக்கான சந்திப்புதான் என்று கூறப்படுகிறது.ஏற்கெனவே எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் தீவிரமாக உள்ளார்.

இதில் முதலில் ரஜினி நடிப்பார் என்று சொல்லப்பட்டது.பின்னர் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்தான் நடிக்கப் போகிறார். அவரும் ஷங்கரும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர் என செய்தி வந்தது.இப்போது ரஜினியும் ஆமீர்கானும் இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எந்திரன் 2-ம் பாகத்தில் நிறைய கிராபிக்ஸ் மற்றும் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் உள்ளதால், பணம் ஏராளம் தேவைப்படும். எனவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு செலவழித்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம் ஷங்கர்.

ரஜினி - ஆமீர் இணைந்து படம் பண்ணுகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு பாலிவுட் மீடியாவில் பரபரப்பு செய்தியாகவும் உள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரியில் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரஜினி, ஷங்கர், ஆமீர்கான் மூவருமே இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions