கெட்ட வார்த்தை பட்டியலை எதிர்த்து அமீர்கான்,வித்யாபாலன் உட்பட பாலிவுட் நட்சத்திரங்கள் அமைச்சருடன் சந்திப்பு

Bookmark and Share

கெட்ட வார்த்தை பட்டியலை எதிர்த்து அமீர்கான்,வித்யாபாலன் உட்பட பாலிவுட் நட்சத்திரங்கள் அமைச்சருடன் சந்திப்பு

அமீர்கான், தீபிகா படுகோன் உட்பட பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பையில் இன்று மாநில தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரை சந்தித்து திரைப்பட தணிக்கைக் குழு வெளியிட்ட ’கெட்ட வார்த்தை’ பட்டியலுக்கு எதிராக தங்களின் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அண்மையில், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவரான நிகலானி ’ஆட்சேபத்திற்குரிய வார்த்தைகள்’ என்று 28 வார்த்தைகளை பட்டியலிட்டு திரைப்பட தணிக்கை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். பல பகுதிகளில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்ததையடுத்து அந்த சுற்றறிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான ‘தும் லகா கே ஹைசா’ என்ற இந்திப் படத்தில் ’லெஸ்பியன்’ என்ற வார்த்தையை நீக்கியதற்காக சென்சார் போர்டு திரைப்படத் துறையின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஹாலிவுட் படமான ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’ படம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதல்ல என்று கூறி தடை செய்யப்பட்டது. தற்போது தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள ’என்எச்10’ திரைப்படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குரியது என்று சென்சார் போர்டு கருதியதால் படம் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமீர் கான், வித்யா பாலன், தீபிகா படுகோன், ஷப்னா ஆஸ்மி, கரண் ஜோகர், இயக்குனர் அனுராக் காஷ்யப், உட்பட திரைப்படத் துறையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் மும்பையில் இன்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை சந்தித்து, சமீபத்தில் மத்திய தணிக்கைக் குழு வெளியிட்ட கெட்ட வார்த்தை பட்டியல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினர்.

பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் இந்த பிரச்சனை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் விவாதிப்பதாகவும், தங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்ததாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் முகேஷ் பட் தெரிவித்தார்.  


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions