அமீர்கானை கூலாக மிரட்டும் பா.ஜ.க தலைவர்?

Bookmark and Share

அமீர்கானை கூலாக மிரட்டும் பா.ஜ.க தலைவர்?

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அவருக்கு சிகிச்சை காத்திருக்கிறது என்று மிரட்டும் தொனியில் பா.ஜ.க தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா, “சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்று யாராவது கூறினால் உடனே அது எனக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களுக்கு நிச்சயமாக சிகிச்சை தர வேண்டும்.

அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை மிக அவசியமானதும் கூட.” என்றார்.

இதே சகிப்பின்மை குறித்து கருத்து கூறியதால் தனது ‘தில்வாலே’ படத்தின் போது ஷாரூக் கான் சந்தித்த இன்னல்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய கைலாஷ், “ஒருவருக்கு சிகிச்சை முடிந்து விட்டது. இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நேரம் இது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா? என்று தனது மனைவி கேட்டதாக பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

“அப்படி என்றால் அமீர் கான் பாகிஸ்தான் போகட்டும்.” என்று தொடங்கிய பா.ஜ.க-வினரின் விமர்சனம் மிகவும் மோசமான வகையில் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சமீப காலமாக இந்த விவகாரம் கொஞ்சம் நீர்த்துப் போகத் தொடங்கிய நிலையில், டெல்லியின் எஸ்.ஜி.பி.டி கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க தலைவர் ராம் மாதவ், இந்தியாவின் கவுரவம் குறித்து தான் நடித்த விளம்பரப் படத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு அறிவுரை கூறுவதைப் போல், தனது மனைவிக்கும் அமீர்கான் எடுத்துக்கூற வேண்டும் என்று கூறி மீண்டும் சர்ச்சையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை
கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்
மாபெரும் சாதனை செய்த மாஸ் ஹீரோ அமீர்கான்!
சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions