மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ

Bookmark and Share

மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ

ஆமீர் கானின் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் கத்ரீனா கைஃபை ஹீரோயினாக போடுமாறு சல்மான் கான் பரிந்துரை செய்துள்ளார்.

பாலிவுட்டில் நுழைந்தபோது கத்ரீனா சல்மான் கானின் காதலியானார். அதன் பிறகே அவரது கெரியர் பிக்கப்பாகி முன்னணி நடிகையானார். வளர்ந்த பிறகு கத்ரீனா சல்மானை பிரிந்து நடிகர் ரன்பிர் கபூரிடம் சென்றார்.

தற்போது ரன்பிரையும் பிரிந்து தனியாக உள்ளார். புதுப் பட வாய்ப்புகளும் இல்லை.

ரன்பிர் கபூரை பிரிவதற்கு முன்பு கத்ரீனா சல்மான் கானை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். தற்போது அவர் சல்மான் கான் நடித்து வரும் டைகர் ஜிந்தா ஹை படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனந்த் எல் ராய் ஷாருக்கானை வைத்து இயக்கும் புதுப் படம் ஒன்றில் கத்ரீனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தவிர்த்து அவர் கையில் புதுப் படங்கள் எதுவும் இல்லை.

ஆமீர் கான் ஆதித்யா சோப்ராவின் இயக்கத்தில் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கத்ரீனாவை ஹீரோயினாக்குமாறு சல்மான் ஆமீர் கானிடம் பரிந்துரை செய்துள்ளார்.

கத்ரீனா ஏற்கனவே தூம் 3 படத்தில் ஆமீருடன் சேர்ந்து நடித்துள்ளார். ஏற்கனவே நடித்த நடிகையுடன் மீண்டும் நடிக்க ஆமீர் விரும்பவில்லை. தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஆலியா பட்டை நடிக்க வைக்க விரும்புகிறார் ஆமீர்.

கத்ரீனாவை ஒப்பந்தம் செய்வது ஆதித்யா சோப்ரா மற்றும் ஆமீர் கான் கையில் உள்ளது. நண்பர் சல்மானின் பரிந்துரையை ஏற்று ஆமீர் கத்ரீனாவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions