ஹீரோ ஹீரோயின் வில்லன் இல்லாமல் உருவான ஆண்டவன் கட்டளை

Bookmark and Share

ஹீரோ ஹீரோயின் வில்லன் இல்லாமல் உருவான ஆண்டவன் கட்டளை

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆண்டவன் கட்டளை'. இதற்கு முன் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை', குற்றமே தண்டனை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் என முன்னணி நடிகர், நடிகையர் நடித்திருந்தாலும் இப்படத்தின் கதை ஹீரோ, ஹீரோயின், வில்லன் என யாரை சுற்றியும் நகராதாம்.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை' போல கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதை நகரும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் கதையுடன் ஒட்டிய பாடல்களாகவே அவை இருக்குமென்றும் ஹீரோ, ஹீரோயினுக்கு என தனியாக பாடல்கள் இருக்காதென்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வழக்கமான கமர்சியல் படங்கள் போல இல்லாமல் 'ஆண்டவன் கட்டளை' வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions