மீண்டும் உருவாகும் பாண்டியராஜனின் ஆண்பாவம்

Bookmark and Share

மீண்டும் உருவாகும் பாண்டியராஜனின் ஆண்பாவம்

பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்த படம் ‘ஆண் பாவம்’. இப்படம் 1985ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் பாண்டியராஜன், பாண்டியன், சீதா, ரேவதி என பலர் நடித்திருந்தார்கள். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளார் பாண்டிய ராஜன்.

இன்றைய காலத்திற்கு ஏற்ப கதை, திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் பாண்டியராஜனே இயக்கும் படத்திற்கு 'ஆண்பாவம் 99%' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இன்னொரு கதாநாயகன், 2 கதாநாயகிகள் மற்றும் இவர்களுடன் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

‘வஜ்ரம்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் ஆர்.சங்கர் இப்படத்தை தயாரிக்கிறார். கேரளாவிலுள்ள ஒற்றப்பாலத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions