‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!

Bookmark and Share

‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!

MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது.

பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

 எப்போதும் பாசிடிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும் அதுமட்டுமல்ல நடிகர் ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அருண்.சி. மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு - திருமலை.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை டிச-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது

 


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions