
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்த படம் ரெட்டைச்சுழி. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் ஆரி. அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்தார்.
அதையடுத்து, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி ஆகிய படங்களில் நடித்த ஆரி, தற்போது கடை எண் 6, மாயா, மானே தேனே பேயே ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனபோதும், ஆரியைப்பற்றி எந்தவித பரபரப்பு செய்திகளும் மீடியாக்களில் வெளியாகவில்லை. நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கும் மாயா படத்திலும் அவர் நடித்தபோதும் அந்த படத்தையும் நயன்தாராவே ஆக்ரமித்துக்கொண்டார்.
அதனால் எப்போதும் போலவே இருக்கிற இடமே தெரியாமல் நடித்துக்கொண்டிருக்கிறார் ஆரி. ஆனால் சமீபகாலமாக தான் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், எனக்கும் ஒரு காதலி இருக்கிறார், அவர் ஒரு நடிகைதான்.
என்றாலும் இப்போதைக்கு அவர் யார் என்பதை சொல்லமாட்டேன் என்று மீடியாக்களுக்கு பீடிகை போட்டு வருகிறார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று நடிகரின் வட்டாரத்தை விசாரித்தால், அதெல்லாம் வெறும் வதந்தி என்கிறார்கள்.
நிஜத்திலேயே காதலி இருந்தால் அவர் வாயே திறக்க மாட்டார். அப்படி யாரும் இல்லாததால்தான் இப்படியொரு செய்தியை தைரியமாக கூறி வருகிறார் என்கிறார்கள்.
Post your comment