அபிராமி ராமநாதன் தயாரிப்பில் நடிகர் ஆரி!

Bookmark and Share

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் நடிகர் ஆரி!

தமிழில் நிறைய ஹிட் படங்களை விநியோகித்து வந்த அபிராமி ராமநாதன் தற்போது ‘உன்னோடு கா’ என்ற புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க காமெடியாக உருவாகும் இப்படத்தில் ஆரி ஹீரோவாகவும், மாயா ஹீரோயினாகவும் நடிக்கவிருக்கிறார்கள். மேலும், பிரபு, ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தை ஆர்.கே. இயக்குகிறார். சத்யா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. 

பாரம்பரியம் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து ஆரி கூறும்போது, என் மகிழ்ச்சியை சொல்லில் சொல்லி அளவிட முடியாது. அபிராமி திரை அரங்குகளின் உரிமையாளர் ராமநாதன் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் சற்று பதற்றமாகத்தான் இருந்தது.

ஆனால் அது அவர் படத்தில் நடிக்க சொல்லி என்பதை தெரிந்துக் கொண்டவுடன் என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. 

வளரும் நடிகனான எனக்கு அவரது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நடிக்க அழைப்பு வந்து இருப்பதில் மிக மிக பெருமை. 'உன்னோடு கா' என்று தலைப்பிட்டு உள்ள இந்தப் படத்தில் நான் பிரபு சாருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார். 

அவர் மேலும் கூறும்போது, இது முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக, குடும்பத்தோடு வந்து ரசிக்க கூடிய படமாக இருக்கும் என்றார்.


Post your comment





Related News
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் - ஆரி..!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions