நயன்தாரா நாயகனுக்குத் திருமணம்!

Bookmark and Share

நயன்தாரா நாயகனுக்குத் திருமணம்!

தாமிரா இயக்கத்தில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்த ‘ரெட்டச் சுழி’ படத்தில்  அறிமுகமான ஆரி, பின் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, மற்றும் அண்மையில் வெளியான ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.   

மாயா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 

நதியா, ‘பி.ஏ.’ பட்டதாரி. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் ஆரி-நதியா இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.  சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் - ஆரி..!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions