நானும் ஓவியனாகிவிட்டேன் - ஆரி

Bookmark and Share

நானும் ஓவியனாகிவிட்டேன் - ஆரி

ரெட்டை சுழி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி போன்ற படங்களில் நடித்தவர் ஆரி. வெறும் ஆரி என்று சொல்வதை விட நெடுஞ்சாலை ஆரி என்றால் எல்லோருக்கும் தெரியும்.

இவர் இப்போது நயன்தாராவுடன், 'மாயா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இப்படம் குறித்து ஆரி நம்மிடம் கூறுகையில், இயக்குநர் அஸ்வின் சரவணன் ஒரு த்ரில்லர் குறும்படம் ஒன்றை இயக்கினார்.

அதன் டீசரை நயன்தாராவிடம் போட்டு காண்பித்தார். டீசரே நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து போனது. அதன்பிறகு முழுகதையையும் கேட்டு இப்படத்தில் நடித்தார் நயன்தாரா. இது ஒரு சூப்பர் நெச்சுரல் த்ரில்லர் படம்.

படத்தில் நான் ஓவியராக நடிக்கிறேன். இதற்காக ஆர்ட் டைரக்டர் ஒருவரிடம் முறையாக பயிற்சி பெற்று இப்படத்தில் நடித்தேன். சொல்லப்போனால் இந்தப்படத்தில் நடித்தபிறகு இப்போது நானும் ஓவியம் வரையும் திறன் பெற்றுள்ளேன்.

நானும் இப்போது ஓவியன் தான். என்னுடன் நயன்தாராவும் நடிக்கிறார். நயன்தாராவுக்கு படத்தில் போராடும் பெண் கேரக்டர். த்ரில்லர் படம் என்பதால் நானும், நயன்தாராவும் பயந்து பயந்து நடித்தோம் என்று கூறினார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகி வரும் மாயா படம், விரைவில் வெளிவர இருக்கிறது.


Post your comment





Related News
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் - ஆரி..!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions