
இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கத்தில் ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, ஸ்ரீஜா தாஸ் என பலர் நடித்துள்ள இங்கிலிஷ் படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு எதிராக நடிகர் ஆரி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகார் மனுவில் இங்கிலிஷ் படம் என்ற படத்தில் கதாநாயகனாக நான் நடித்திருப்பதாக கூறி ஜெகதீஷ் என்பவர் துணை நடிகர் நடிகைகளிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக பண மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர் கூறியபடி படத்தின் இயக்குனர் பெயர் ஜெகதீஷ் இல்லை, இந்த படத்தின் இயக்குனர் குமேரஷ் குமாரை தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்த போது படம் முழுவது முடிவடைந்து வரும் 6-ம் தேதி வெளிவர உள்ளது.
இந்நிலையில் ஆரி தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக எங்களது படத்தின் பெயரை பயன்படுத்தி உள்ளார், இதனால் எங்களது படத்தை அக்டோபர் 6-ம் தேதி எப்படி வெளியிடுவது என தெரியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் படத்தில் யார் நடிக்கிறார்கள்? இயக்குனர் யார்? என்ற தகவல்கள் முழுமையாக வெளியிடப்பட்டு உள்ள நிலையில் எதுவும் தெரியாமல் யாரோ ஒருவரை இயக்குனர் என கூறி பொய்யான குற்றசாட்டுகளை கூறியுள்ளார்.
மேலும் இந்த பிரச்னையை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயார் எனவும் இதற்கு நடிகர் ஆரி நிச்சயம் பதில் கூறியாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் எந்த இசையமைப்பாளர் மீது புகார் அளித்தாரோ அவருடன் நடிகர் ஆரி ஒன்றாக இருப்பதிலிருந்து என் படத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்துள்ளார்.
இப்படி பட்ட ஒரு சில நடிகர்களின் பப்லிசிட்டி மோகத்தால் பல தயாரிப்பாளர்கள் பாதாளத்தில் தள்ளப்படுவது தொடர்க்கதையாகி வருகிறது எனவும், மேலும் இதுபோல் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கபோவதாகவும் இங்கிலிஷ் பட இயக்குனர் கூறியுள்ளார்.
Post your comment