பெண் சாமியார் ராதேமா மீது பாலியல் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை

Bookmark and Share

பெண் சாமியார் ராதேமா மீது பாலியல் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை

எப்போதும் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டு அசத்தி வரும் பெண் சாமியார் ராதேமா.  இவர், குட்டைப்பாவாடை அணிந்து நடனம் ஆடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.

தன்னிடம் வரும் பக்தர்களை நெருக்கமாக கட்டிப்பிடிப்பதாகவும் அவர்மீது கடும் விமர்சனம் எழுந்தது. ஆர்ஷி கான் என்ற மாடல் அழகி ராதேமா விபசார விடுதி நடத்துவதாகவும், அதில் தன்னை இணைந்து சேவை செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் புகாரளித்தார்.

இதுதவிர மேலும் பல புகார்களும் வழக்குகளும் அவர் மீது உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகையும் பிரபல டி.வி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் (சீசன் 4) நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான டாலி பிந்த்ரா, ராதேமாவும் அவரது ஆதரவாளர்களும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பஞ்சாப் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

தன்னை சில பெண்களும், முன்னாள் பஞ்சாப் போலீஸ் அதிகாரியும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியதாகவும், அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதை அந்த அதிகாரி மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களை போலீசில் ஒப்படைத்துள்ளதாக டாலி பந்த்ரா உறுதிபடக் கூறியுள்ளார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions