கோலிவுட் அழைப்பை அலட்சியம் செய்த ஆருஷி!

Bookmark and Share

கோலிவுட் அழைப்பை அலட்சியம் செய்த ஆருஷி!

அழகன் அழகி படத்தில் அறிமுகமானவர் ஆருஷி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, கன்னடம் என்று நடிக்க சென்று விட்ட அவரை மீண்டும் வேல்முருகன் போர்வெல்ஸ், அடித்தளம் படங்களுக்காக தமிழுக்கு கொண்டு வந்தனர். அதனால் தமிழில் இந்த படங்களை வைத்து ஒரு நல்ல அடித்தளத்தை போடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தார் ஆருஷி. இருப்பினும், வேல்முருகன் போர்வெல்ஸ் படம் வெற்றி பெறவில்லை. அதையடுத்து நடித்த படங்களும் வெளிவராமல் கிடப்பில் கிடப்பதால், புதிய தமிழ் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால், ஹீரோயினி மிஸ்ஸிங் என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்ற ஆருஷிக்கு அங்கு அடுத்தடுத்து சில படங்கள் புக்காகி விட்டதாம். 

அதனால், ஏற்கனவே தெலுங்கில் ஹிட் படங்களில் நடித்திருக்கும் ஆருஷி, இனி அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல், தெலுஙகிலேயே முழுக்கவனத்தையும் செலுத்த அங்கு முகாமிட்டிருக்கிறார். இந்த நேரத்தில் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கதாநாயகி என்பதால் சில தமிழ் டைரக்டர்கள் அவரை தொடர்பு கொண்டபோது, அவர்களின் அழைப்பை அலட்சியம் செய்து விட்டாராம் ஆருஷி. அதோடு, மீண்டும் தமிழை நம்பி தெலுங்கு சினிமாவில் இருநது வெளியேற நான் தயாராகயில்லை என்றும் அடித்து சொல்லி விட்டாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions