விஜய்யுடன் மீண்டும் மோதும் ஆர்யா!

Bookmark and Share

விஜய்யுடன் மீண்டும் மோதும் ஆர்யா!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதேநாளில் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் திரையில் மோதுகிறார் ஆர்யா. இதற்குமுன்பு விஜய்யின் நண்பன் படமும் ஆர்யாவின் வேட்டை படமும் 2012-ம் ஆண்டு பொங்கலன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions