வங்கியில் ரூ.97 கோடி கடன் பாக்கி: ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொத்துக்கள் முடக்கம்

Bookmark and Share

வங்கியில் ரூ.97 கோடி கடன் பாக்கி: ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொத்துக்கள் முடக்கம்

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கமல் நடித்த தசாவதாரம், விக்ரமின் அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். படங்களை தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார்.

ரூ.84 கோடிவரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தொகை வட்டியையும் சேர்த்து ரூ.97 கோடியாக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணத்தை திருப்பி செலுத்தாததால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்கள் வீடுகள், தியேட்டர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கு 121 சதுர அடி சொத்துக்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடக்கியுள்ளது. இது குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் கூறும்போது பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டு அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் கடன் தொகை திருப்பி செலுத்தப்படும் என்றனர்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions