சீரியல்களை கைவிட ஆஷா சரத் முடிவு

Bookmark and Share

சீரியல்களை கைவிட ஆஷா சரத் முடிவு

பாபநாசம் படத்தின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பவர் ஆஷா சரத். கண்டிப்பான, திமிரான போலீஸ் அதிகாரி, மகனுக்காக ஏங்கும் அம்மா என இரண்டு டைமன்ஷன்களிலும் மிரள வைத்தார். மலையாள த்ரிஷ்யமும், தமிழ் பாபநாசமும் அவரை திரைப்பட நட்சத்திரமாக உயர்த்தி இருக்கிறது.

40 வயதுக்கு மேலும் ஒரு பெண்ணால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதை ஆஷா நிரூபித்திருக்கிறார்.

நடன மாஸ்டரான ஆஷா மலையாள சேனல் ஒன்றில் சக்கைபோடு போட்ட குங்குமப்பூ தொடரில்தான் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு மளமளவென 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தார். கேரளாவின் ராதிகா என்ற புகழை தட்டினார்.

சீரியல் பார்த்து அழாத மலையாள பெண்களை அழ வைத்தவர். அந்த புகழே அவருக்கு திரைப்பட வாய்ப்புகளை கொடுத்தது. த்ரிஷ்யத்துக்கு முன்பே நான்கைந்து படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருந்தாலும் த்ரிஷ்யம் தான் நட்சத்திர அந்தஸ்தை தேடிக் கொடுத்தது.

தற்போது மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் வாய்ப்புகள் குவிவதால் இனி சீரியலுக்கு குட்பை சொல்ல முடிவு செய்து விட்டார். மலையாளத்தில் அடுத்து நடிக்க முடிவு செய்திருந்த சேனல்களுக்கு பலமாக நோ சொல்லிவிட்டார்.

தமிழில் இரண்டாவது படத்திலேயே கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். தூங்காவனம் படத்தில் கமலின் மனைவியாகவும், 15 வயது மகளின் தாயாகவும் நடிக்கிறார். சின்னத்தரை சினிமாவுக்கு நடிகர்களை மட்டுமல்ல நடிகையையும் தரும் என்பது நிரூபணமாகியிருக்கிறது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions