கமலின் அடுத்த படத்திலும் இடம்பிடித்தார் ஆஷா சரத்!

Bookmark and Share

கமலின் அடுத்த படத்திலும் இடம்பிடித்தார் ஆஷா சரத்!

ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது கதையில் மொழிக்கேற்றவாறு சில மாறுதல்களை செய்வதோடு அந்த மொழியில் கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்வார்கள். ஆனால் ஒருசில கனமான கதாபாத்திரங்களை ஒரிஜினல் படத்தில் நடித்தவர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இயக்குனர்களுக்கு தோன்றுவது உண்டு.  

அந்தவகையில் மலையாளத்தில் வெற்றிபெற்ற த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான். சொல்லப்போனால் இடைவேளைக்குப்பின் ஆஷாவின் டெர்ரரான நடிப்பு பார்வையாளர்களை கடைசிவரை திகிலிலேயே வைத்திருக்கும். படத்தின் வெற்றிக்கு ஆஷாவும் மிக முக்கிய தூணாக இருந்தார். அதனாலேயே கன்னடத்தில் இதை ரீமேக் செய்த இயக்குனர் பி.வாசு கூட அந்த கேரக்டரில் ஆஷாவே நடிக்கட்டும் என விட்டுவிட்டார்.  

அதேபோல தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் ஆஷா சரத் நடித்தால்தான் சரியாக இருக்கும் என கமலும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் ஏகமனதாக தீர்மானித்துவிட்டார்கள். பாபநாசம் படத்தில் அவரது திறமையான நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்ட கமல் அவருக்கு தந்த பரிசு என்ன தெமா..? தற்போது தான் நடித்துவரும் தூங்காவனம் படத்திலும் ஆஷா சரத்துக்கு ஒரு முக்கிய வேடத்தை தந்துவிட்டார் கமல். திறமைக்கு எங்கேபோனாலும் மதிப்புதான்.


Post your comment





Related News
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார், 3 நாள் வசூலை அள்ளிய பாட்ஷா
மீண்டும் களை கட்டிய பாட்ஷா… அத்தனை அரங்குகளும் ஹவுஸ்ஃபுல்!
சென்னையில் பாட்ஷாவுக்கு எத்தனை தியேட்டர் தெரியுமா... பிரமித்து நிற்கும் தமிழ் திரையுலகம்!
ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா டிஜிட்டலில் வெளியாகிறது!
பாட்ஷா படத்தின் ‘தூண்’ காலமானார்!
ரஜினி பிறந்தநாளில் மீண்டும் ரிலீஸாகும் பாட்ஷா
பாட்ஷா பட வசன எழுத்தாளருடன் ரஜினி சந்திப்பு!
பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை! - ரஜினி அதிரடி
பாட்ஷா பாணியில் அஜீத்தின் 56வது படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions