சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!

Bookmark and Share

சென்டிமென்டை உடைக்கும் ஆஷ்னா சாவேரி!

சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர் ஆஷ்னா சாவேரி. அதையடுத்தும் அதே சந்தானம் நடிக்கும் இனிமேல் இப்படித்தான் என்ற படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர் முதல் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே, காமெடியனுடன் ஜோடி சேர்ந்தால் அதன்பிறகு மற்ற ஹீரோக்களுடன் நடிக்க முடியாது என்றொரு சென்டிமென்ட் கோலிவுட்டில் இருப்பதை சிலர் அவரது காதில் போட்டனர்.

ஆனால், சென்டிமென்ட் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நடிக்கிற படங்கள் வெற்றி பெற்றால் இந்த சென்டிமென்டெல்லாம் காணாமல் போய் விடும் என்று கூறினார்  இந்த நிலையில், வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தை அடுத்து சந்தானத்துடன் அவர் நடிக்கும் இனிமேல் இப்படித்தான் படத்தில் ஆஷ்னாவை பக்கா கமர்சியல் ஹீரோயினியாக மாற்றும் கதாபாத்திரத்தைதான் சந்தானம் கொடுத்துள்ளாராம்.

அதனால் இந்த படத்திற்கு பிறகு கோலிவுட் டைரக்டர்களின் கவனம் என் பக்கம் திரும்பும் என்று கூறிவரும் ஆஷ்னா சாவேரி, சரியான வாய்ப்பு கிடைத்தால் என்னாலும் அனுஷ்கா மாதிரி அதிரடி நாயகியாக முடியும்.

சினிமாவைப்பொறுத்தவரை யாராக இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவர்களை உயர்த்தும். அதனால் அந்த உயரத்தை தொடுவதற்காகத்தான் தற்போது நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
இயக்குனர்களுக்கு தொல்லை கொடுக்கும் சந்தானம் நாயகி
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பயணித்த சந்தானம் நாயகி
ஆஷ்னா சவேரிக்கு மீண்டும் கைகொடுப்பாரா சந்தானம்?
சந்தானத்துடன் நடிக்க எந்த நாயகியும் ஒப்புக்கொள்வார்கள்: ஆஷ்னா சவேரி
சந்தானத்தின் மீது ஆஷ்னா ஜாவேரி வருத்தம்!
ஆஷ்னாசாவேரிக்கு ஆர்யா கொடுத்த வாக்குறுதி!
மீண்டும் சொந்த தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சந்தானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions