அசினுக்கு விரைவில் திருமணம்?: தொழிலதிபரை மணக்கிறார்

Bookmark and Share

அசினுக்கு விரைவில் திருமணம்?: தொழிலதிபரை மணக்கிறார்

மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை அசின். தமிழில் விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார். 

பின்னர், அவரை பாலிவுட் மோகம் தொற்றிக் கொள்ளவே, அங்கு சென்று ஒரு சில படங்களில் நடித்தார். இதில், சில படங்கள் அவருக்கு பெரிய வெற்றிகளைக் கொடுத்தாலும், பல படங்கள் பெரிய தோல்வியைக் கொடுத்தன. 

இவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால், கோலிவுட் சினிமாவும் இவரை கைகழுவியது. பாலிவுட்டிலும் இவர் கடைசியாக நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் அங்கேயும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார். 

தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘ஆல் இஸ் வெல்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு அசின் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மா என்பவரைத்தான் அசின் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. இருவரும் கடந்த 2 வருடங்களாக ஒன்றாக பழகி வருவதாகவும், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருப்பதால் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அசின், தன்னுடைய பட சம்பந்தமான வேலைகளை முடித்துவிட்டு, திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions