அசின்–தொழில் அதிபர் ராகுல் சர்மா காதல் மலர்ந்தது எப்படி?

Bookmark and Share

அசின்–தொழில் அதிபர் ராகுல் சர்மா காதல் மலர்ந்தது எப்படி?

நடிகை அசின்–மைக்ரோ மேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை இருவருமே மறுக்கவில்லை. எனவே இவர்கள் திருமணம் நடப்பது உறுதியாகி இருக்கிறது. 

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 2000–ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் ராகுல் சர்மா. இவருடன் விகாஸ் ஜெயின், சுமீத் அரோரா ராஜேஸ் அகர்வால் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினார்கள். 

அசினை கைப்பிடிக்கப் போகும் ராகுல் சர்மாவுக்கு வயது 36. இவரது நெருங்கிய நண்பர் இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் 2012–ல் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார். 

இந்த கால கட்டத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘கிலாடி 786’ என்ற பட சூட்டிங்கை பார்ப்பதற்காக ராகுல் சர்மா சென்றிருந்தார். இந்த காலகட்டத்தில் இந்தி கஜினி மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அசின் பிரபலமாக இருந்தார். அவரை ராகுல் சர்மாவுக்கு அக்ஷய்குமார் அறிமுகம் செய்து வைத்தார். 

பின்னர் அக்ஷய்குமார் பங்கேற்கும் சினிமா விருந்துகளிலும் அசினும், ராகுல் சர்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். ராகுல்சர்மா இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர். விலை உயர்ந்த புதுப்புது கார்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ஆர்வம் கொண்டவர். 

கடந்த 2 ஆண்டுகளாக அசினும்– ராகுல் சர்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். அப்போது மனம் விட்டு பேசினார்கள். இதில் காதலில் விழுந்து நெருக்கமானார்கள். சமீபத்தில் இரண்டு பேரும் ஒரு காரில் உட்கார்ந்து தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்ததை, பத்திரிகையாளர் ஒருவர் பார்த்து விட்டார். அவர் படம் எடுக்க முயற்சி செய்ய அசின் சண்டைக்கே போய் விட்டார். 

இந்த சம்பவத்துக்குப்பிறகு அசின்–ராகுல் சர்மா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது கல்யாணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக படத்தில் நடிப்பதை அசினும் குறைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. 

ஆகா ஓகோ என்று இருந்த பல சினிமா காதல் ஜோடிகள் திருமணம் வரை சென்று மகிழ்ச்சியுடன் பிரிந்த சம்பவங்கள் உண்டு. அசின்–ராகுல் சர்மா காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions