அசின் - ராகுல் சர்மா காதலுக்கு நான் தான் காரணம்: நடிகர் அக்ஷய்குமார்

Bookmark and Share

அசின் - ராகுல் சர்மா காதலுக்கு நான் தான் காரணம்: நடிகர் அக்ஷய்குமார்

நடிகை அசினுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனர் ராகுல் சர்மாவை அவர் மணக்கிறார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்தனர். தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். 

அசின் தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தார். கஜினி படம் மூலம் இந்தி படஉலகுக்குப்போனார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தியில் பட வாய்ப்புகள் குவிந்தன. சல்மான்கான், அபிஷேக்பச்சன், அக்ஷய்குமார் என பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அக்ஷய் குமாரும், ராகுல் சர்மாவும் நெருங்கிய நண்பர்கள். 

‘ஹவுஸ்புல்-2’ படத்தில் அக்ஷய்குமாரும், அசினும் நடித்துக்கொண்டிருந்தபோது, ராகுல் சர்மா அடிக்கடி அந்த படப்பிடிப்புக்கு வந்தார். அப்போது அசினுடன் நட்பு ஏற்பட்டது. அதுவே பிறகு காதலாக மலர்ந்தது. இருவரும் காதலிப்பதற்கு அக்ஷய்குமார்தான் காரணம் என்று செய்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- 

அசின், ராகுல் சர்மா காதலுடன் என் பெயரும் அடிபடுகிறது. அவர்கள் காதலுக்கு நான் உதவி செய்தது உண்மைதான். ‘ஹவுஸ்புல்-2’ படத்தில் நானும், அசினும் அப்போது நடித்துக்கொண்டிருந்தோம்.

ராகுல் சர்மா என்னை பார்க்க வந்தார். நான் ராகுல் சர்மாவையும், அசினையும் தனியாக சந்தித்து பேசவைத்தேன். டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. பிறகு அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது அது திருமணம் வரை வந்து இருக்கிறது. 

இவ்வாறு அக்ஷய் குமார் கூறினார். 

அசின் தற்போது ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படம் வெளியானதும் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகு அசின் சினிமாவை விட்டு விலகுகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions