பெண்களின் கண்டனத்திற்கு ஆளான நடிகையின் கணவர்...!

Bookmark and Share

பெண்களின் கண்டனத்திற்கு ஆளான நடிகையின் கணவர்...!

பல முக்கியமான பிரச்சனைகளில் பெரும்பாலும் பிரபலங்கள் பதில் சொல்லாமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா..? தாங்கள் சொல்லும் பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வேறு ஒரு பிரச்னைக்கு அடி போட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

அல்லது வாய்தவறி வேறு எதையும் பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்னர் வரைக்கும் தானும் இப்படி ஒரு சிக்கலில் சிக்குவோம் என மலையாள இயக்குனரும் நடிகை ரீமா கல்லிங்கலின் காதல் கணவருமான ஆஷிக் அபு அறிந்திருக்க நியாயமில்லை.. இல்லையென்றால் இப்படி வாய்தவறி பேசி வம்பை விலைக்கு வாங்கியிருக்கமாட்டார்.  

சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் டாம் சாக்கோவுடன் பிரபல இயக்குனரான ஆஷிக் அபுவையும், நடிகர் பஹத் பாசிலையும் தொடர்புபடுத்தி பத்திரிகையாளர் ஒருவர் தேவையில்லாமல்  செய்தி வெளியிட்டுவிட்டார்.. இது இயக்குனர் ஆஷிக்கை கொந்தளிக்க வைக்கவே, சூடாக பத்திரிகையாளர்கள் மீது விமர்சனங்களை கொட்டினார்.

அப்படி கொட்டும்போது தெரிந்தோ, தெரியாமலோ ’பிராஸ்டிடியூட்’ என்கிற வார்த்தையை பயன்படுத்திவிட்டார்.  சும்மா விடுவார்களா பெண்கள் அமைப்பினர்.. அதிலும் பெண் பத்திரிகையாளர்கள்..? ஆஷிக் அபுவுக்கு எதிராக கண்டனங்களை தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஆஷிக் அபுவின் மன விகாரத்தை இது வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இன்னும் ஒருவர், மூன்றாந்தர பத்திரிகையாளர்களை விமர்சிக்கிறேன் என அவர்களுக்கு சமமாக விலைமாதுக்களை வம்புக்கு இழுத்தது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறுவது என்பது இதுதானோ..? 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions