நர்சிங் படித்து முடித்தார் ஆத்மியா

Bookmark and Share

நர்சிங் படித்து முடித்தார் ஆத்மியா

என்னதான் சினிமாவில் ஹீரோயினாக நடித்து லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும். படித்து முடித்து எப்போதும் ஒரு வேலைக்கு செல்ல தயார் நிலையில் இருப்பார்கள் மலையாள ஹீரோயின்கள்.

காரணம் அங்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியமாக கருதப்படும்.அந்த வரிசையில் தனக்கு பிடித்தமான நர்சிங் படிப்பை படித்து முடித்திருக்கிறார் ஆத்மியா.

தமிழில் மனம் கொத்தி பறவை, போங்கடி நீங்களும் உங்க காதலும் படங்களில் நடித்த ஆத்மியா தற்போது வெப்பசலனம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

அமீபா என்ற ஆர்ட் பிலிமிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில்தான் நர்சிங் படித்து முடித்திருக்கிறார். "உலகிலேயே நர்ஸ்கள்தான் பூமியில் வாழும் தேவதைகள்.

மற்றவர்களுக்காகவே வாழும் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் நான் நர்சிங் படிக்க விரும்பினேன். நல்ல கல்வி நிறுவனத்தில் நர்சிங் சீட் கிடைத்ததால் நடிப்பை விட்டுவிட்டு படிக்கச் சென்று விட்டேன். இப்போது படிப்பு முடிந்து விட்டது. மீண்டும் தீவிரமாக நடிக்க இருக்கிறேன்" என்றகிறார் ஆத்மியா. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions