ஆவிகுமார் படத்தை சி2எச்சில் வெளியிடுகிறார் உதயா!

Bookmark and Share

ஆவிகுமார் படத்தை சி2எச்சில் வெளியிடுகிறார் உதயா!

ரா ரா படத்தை அடுத்து தனது தம்பி ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் ஒரு வீடியோ கிராபர் வேடத்தில் நடித்தார் திருநெல்வேலி உதயா. அதையடுத்து ஆவிகுமார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் உதயா.

ஆவி சம்பந்தப்பட்ட அமானுஷ்ய கதையில் தயாராகியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கனிகா திவாரி நடித்துள்ளார். ஜெகன் காமெடி செய்திருக்கிறார். இவர்களைதவிர பல கமர்சியல் நடிகர்கள் நடிகைகளும் படத்தில் உள்ளனர்.

ஆனபோதும், உதயாவின் மார்க்கெட் மந்தமாக இருப்பதால் இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லையாம். அதனால் கடந்த சில மாதங்களாகவே வியாபாரம் ஆகாமல் தடுமாறி வந்த அவர்கள், இப்போது ஆவிகுமார் படத்தை சி2எச் மூலம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு அடுத்தடுத்து வெளியாக அப்பாவின் மீசை, அர்ஜூனன் காதலி உள்பட ஐந்து படங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், ஆவிகுமாரும் ஆறாவதாக அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறதாம்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions