தியேட்டர் பிரச்சினையால் தாமதமாகும் ஆவிகுமார்!

Bookmark and Share

தியேட்டர் பிரச்சினையால் தாமதமாகும் ஆவிகுமார்!

ரா ரா படத்திற்கு பிறகு விஜய் நடித்த தலைவா படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார் உதயா. அதையடுத்து ஆவிகுமார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். காண்டீபன் இயக்கியுள்ள இந்த படத்தில் உதயாவுக்கு ஜோடியாக கனிகா திவாரி நடித்துள்ளார்.

ஜெகன் உதயாவின் நண்பராக நடித்திருக்கிறார். சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் பேய் படங்களின் படையெடுப்பு அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் இந்த படத்திற்கு ஆவிகுமார் என்ற டைட்டில் வைத்திருப்பதால் இதுவும் ஒரு பேய் படமாகத்தான் இருக்கும் என்றுதான் மற்றவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் இதுபற்றி உதயாவைக்கேட்டால், இந்த படத்தின் தலைப்புதான் ஆவிகுமார். ஆனால் இது ஆவிகள் சம்பந்தப்பட்ட படமல்ல. ஒரு வித்தியாசமான த்ரில்லர் படம். முக்கியமாக படம் பார்ப்பவர்களை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள்தான் இந்த படம் முழுக்க இருக்கும் என்கிறார்.

மேலும், எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்ட ஆவிகுமார், படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். அதனால்தான் சில மாதங்களாகவே வெளியாக தயார் நிலையில் இருந்தும் பின்வாங்கிக்கொண்டேயிருக்கிறது. சரியான தியேட்டர்கள் கிடைத்தும் உடனே ரிலீஸ் செய்து விடுவோம் என்கிறார் உதயா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions