ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவனை மறக்கலாமா ?

Bookmark and Share

ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவனை மறக்கலாமா ?

ராஜமௌலியின் இயக்கத்தில் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு நேற்று வெளிவந்துள்ள பாகுபலி படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் பிரமாதமாக பாராட்டி வருகிறார்கள்.

மிகப் பெரும் சாதனையை ராஜமௌலி படைத்துவிட்டார் என்று திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே சொல்லி வருகிறார்கள். அதே சமயம் தமிழில் 2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கிய  ஆயிரத்தில் ஒருவன் படத்தை அப்போது யாரும் பெரிதாகப் பாராட்டாமல் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதை இப்போது சிலர் கேள்வியாக எழுப்பி வருகிறார்கள்.

ஒரு ஃபேன்டஸி கதையாக உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' படம் வெறும் 30 கோடி ரூபாயில் மட்டுமே உருவாக்கப்பட்ட படம். அதிலும் பிரமிக்க வைக்கும் பல காட்சிகள் இருந்தன. கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் என மிரட்டலாகவே படத்தைக் கொடுத்திருந்தார்.

ஆனால், அப்போது அந்தப் படம் ரசிகர்களைக் கவராமல் போய்விட்டது. இதைத்தான் சில திரைப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியாக எழுப்பி வருகிறார்கள்.

எப்போதுமே மற்றவர்களின் திறமையைக் கொண்டாடுவதுதான் நமது வழக்கம், நம் வீட்டில் இருப்பவர்கள் சாதித்தால் கொண்டாட மாட்டோம், அதே சமயம் பக்கத்து வீட்டுக்காரன் எதையாவது செய்தார் பாராட்டுவோம் என்ற மனநிலை இருப்பதாகவே பலரும் தெரிவிக்கிறார்கள்.

இன்னும் சில நாட்களுக்கு இப்படி பல ஒப்பீடுகளை சமூக வலைத்தளங்களில் எதிர்பார்க்கலாம்.


Post your comment

Related News
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions