சாலையோரம் தூங்குவோர் பற்றி தரக்குறைவான கருத்து: பாலிவுட் பாடகர் அபிஜீத்துக்கு எதிராக வழக்கு

Bookmark and Share

சாலையோரம் தூங்குவோர் பற்றி தரக்குறைவான கருத்து: பாலிவுட் பாடகர் அபிஜீத்துக்கு எதிராக வழக்கு

காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஒருசில நடிகர்கள் சல்மான் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

அந்த வகையில், பாலிவுட் பாடகர் அபிஜீத் சல்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். நடைபாதை என்பது தூங்குவதற்கு அல்ல என்றும், நடந்த விபத்துக்கு டிரைவரோ, மது அருந்தியதோ காரணம் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.

வீடில்லாமல் சாலையில் தூங்கும் மக்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறு கூறிய அபிஜீத்துக்கு தண்டனை வழங்கக் கோரி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா வழக்கு தொடர்ந்துள்ளார். முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வேதபிரகாஷ் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு நாளை விசாரணைக்கு வருவதாகவும் ஓஜா தெரிவித்தார்.

இதேபோல், அபிஜீத் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் வலியுறுத்தி உள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions