மிரட்ட வரும் அபினய்!

Bookmark and Share

மிரட்ட வரும் அபினய்!

ஞான ராஜசேகரன் இயக்கிய, 'ராமானுஜன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அபினய். கணித மேதை ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெறவில்லை.

இருந்தாலும் இப்படத்திற்கு பிறகு நல்லதொரு வாய்ப்புக்காக காந்திருந்த அபினய், இப்போது 'மைக்கேலாகிய நான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அபினய் நம்மிடம் கூறியதாவது, ராமானுஜம் படம் சரியாக போகவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருந்தது.

அதனால் அடுத்தடுத்த படங்களில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன். தற்போது மைக்கேலாகிய நான் என்ற படத்தில் நடித்து வருகிறேன். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில், என்னுடன் 'தென்மேற்கு பருவக்காற்று' பட நாயகி வசுந்த்ராவும், மாலேமிகா என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள்.

படத்தில் மொத்தமே நான்கு கேரக்டர்கள் தான் நடித்துள்ளனர். அதிலும் 70 சதவீதம் நான் வருவேன். ஆர்.கே., இப்படத்தை இயக்குகிறார், ஒர்க்ஷாப் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மிகவும் சின்னபடமாகத்தான் உருவாகிறது.

ஷூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தை எதிர்பார்க்கலாம், எனது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை இப்படம் காட்டும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஹோட்டல் ரிசப்சனிஸ்ட்டான நாடோடிகள் அபிநயா
அபிநயஸ்ரீயின் கலக்கல் ஆட்டம்!
அபிநயா தான் மெயின் ரோல்..! அனன்யா டம்மி தான்..!
அடுத்த அனுஷ்காவாகும் நாடோடிகள் அபிநயா!
ஸ்டார் பேட்மிட்டன் போட்டி நடத்துகிறார் அபிநயஸ்ரீ
பாலிவுட்டில் கால்பதிக்கும் நாடோடிகள் அபிநயா
கவுதம் மேனன் படம்: ஜெய்க்கு ஜோடியாக அபிநயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions