அடுத்த அனுஷ்காவாகும் நாடோடிகள் அபிநயா!

Bookmark and Share

அடுத்த அனுஷ்காவாகும் நாடோடிகள் அபிநயா!

சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா, அதைத் தொடர்ந்து ஈசன்,  பூஜை என பல படங்களில் நடித்துள்ளார். அதோடு, மலையாளம், தெலுங்கு என்றும் பரவலாக நடித்து வரும் அவர், சமீபத்தில் ஷமிதாப் இந்தி படத்திலும் நடித்திருந்தார்.

ஆக, வாய் பேச முடியாத அபிநயா ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்தவர், இப்போது வித்தியாசமான கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். மேலும், அபிநயாவுக்கு தன்னை மையப்படுத்தி உருவாக்கப்படும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றொரு கனவும் இருக்கிறதாம்.  

அதனால் அந்த மாதிரி கதைகளில் தன்னை நடிக்க வைக்க யாராவது வருவார்களா? என்று காத்திருக்காமல் ஒரு காலத்தில் கேரக்டர் நடிகராக இருந்த தனது தந்தை ஆனந்த் வர்மாவையே தன்னை மையப்படுத்தி ஒரு கதை பண்ண சொன்னாராம் அபிநயா.

அதையடுத்து அவரும் ஒரு அதிரடியான கதையை ரெடி பண்ணி விட்டாராம்.  அந்த கதை அருந்ததியில் அனுஷ்கா நடித்தது போன்று பவர்புல் கதையாம். அப்படி ஒரு வேடத்தில் நான் நடித்தே ஆக வேண்டும் என்று அபிநயா சொன்னதையடுத்துதான் அந்த மாதிரியான அதிரடி கதையை அவர் தந்தை உருவாக்கியுள்ளாராம்.

அதையடுத்து, என் மகளை இந்த மாதிரி ஒரு கதையில் நடிக்க வையுங்கள் என்று சில டைரக்டர்களை கேட்டுக்கொண்டு வருகிறாராம் அபிநயாவின் தந்தை. ஆனால், இதுவரை அந்த கதையை படமாக்க எந்த டைரக்டர்களோ, தயாரிப்பாளர்களோ முன்வரவில்லை என்றபோதும், இது எனது கனவு படம். இதில் எப்படியேனும் நான் நடித்தே தீருவேன் என்று தனது தந்தை வாயிலாக கூறி வருகிறார் அபிநயா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions