ஹோட்டல் ரிசப்சனிஸ்ட்டான நாடோடிகள் அபிநயா

Bookmark and Share

ஹோட்டல் ரிசப்சனிஸ்ட்டான நாடோடிகள் அபிநயா

‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து ‘ஈசன்’, ‘7-ம் அறிவு’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தமிழில் நடித்து வரும் படம் ‘துடி’. இதில் இவர் ஹோட்டல் ரிசப்சனிஸ்ட்டாக நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை ரிதுன் சாகர் இயக்கி வருகிறார்.

அபிநயாவுடன் இப்படத்தில் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.

புதுமையான முறையில் உருவாகும் ‘துடி’ படத்திற்கு நடாஷா ஆதித்யா இசையமைக்கிறார். மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் இப்படத்தின் கதை. மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் உருவான மிஸ் கம்யூனிகேசன் தான் கதையின் மையக்கரு.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலின் இண்டீரியர் அரங்குகளாக அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஐதராபாத், மூணார் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions