அபிநயஸ்ரீயின் கலக்கல் ஆட்டம்!

Bookmark and Share

அபிநயஸ்ரீயின் கலக்கல் ஆட்டம்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய கவர்ச்சி நடிகைகளில் அனுராதாவும் ஒருவர். ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் இவரும் படத்துக்குப்படம் போட்டிபோட்டு கவர்ச்சி நடனமாடி வந்தவர்.

அதையடுத்து, தனது வாரிசான அபிநயஸ்ரீயையும் விஜய் - சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், மகளை தன்னைப்போல் இல்லாமல் கதாநாயகியாக்கவே ஆசைப்பட்டார் அனுராதா.

ஆனால் ப்ரண்ட்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்தபோதும், பின்னர் அபிநயஸ்ரீக்கு எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அம்மா வழியில் அவரும் அயிட்டம் நடிகையாக உருவெடுத்தார்.

ஆனபோதும், இவர் வந்த காலத்தில் கதாநாயகிகளே குத்துப்பாட்டுகளுக்கு ஆடத் தொடங்கியதால் அபிநயஸ்ரீயினால் பெரிதாக வளர முடியவில்லை. அதனால் அவ்வப்போது ஒரு படத்தில் தலைகாட்டி வரும் அவர், தற்போது விவேக் கதாநாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படத்திலும் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.

பாலிவுட் கவர்ச்சி நடிகைகள் ரேஞ்சுக்கு கலக்கல் காஸ்டியூமில் அபிநயஸ்ரீ ஆடியுள்ள அந்த பாடலில், விவேக்குடன் இணைந்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா ராஜேந்திரன் ஆகியோரும் ஆடியுள்ளனர்.

மேலும், அந்த பாடல் விவேக் பேசி நடித்து பிரபலமான பஞ்ச் டயலாக்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன் என்ற வரியில் அப்பாடல் தொடங்குகிறது.


Post your comment





Related News
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
பிரபல நடிகை சூர்யா படத்துடன் நின்று புகைப்படம் எடுத்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பி.சி.ஸ்ரீராம்!
நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்
ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்: 3 அணிகள் மோதல்
தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் பி.சி.ஸ்ரீராம்!
காக்கா முட்டை இயக்குனர் காலை தொட்டு கும்பிடுவேன் நெகிழ்ச்சியில் மலையாள காமெடி நடிகர்!
மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions