'36 வயதினிலே' கிளாமராக வந்த அபிராமி!

Bookmark and Share

'36 வயதினிலே' கிளாமராக வந்த அபிராமி!

தமிழில் அர்ஜுன் ஜோடியாக 'வானவில்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அபிராமி. தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் கமல்ஹாசன் ஜோடியாக அவர் நடித்த 'விருமாண்டி' படம் அவருக்கு மிகப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது.

ஆனால், தமிழில் அதன் பிறகு அவருக்கு நடிக்க வாய்ப்பே வரவில்லை. அவர் முதன் முதலில் நடிகையாக அறிமுகமான மலையாளத்திலும் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின் சில வருடங்கள் எங்கிருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மீண்டும் வந்தார். அதன் பின் 'விஸ்வரூபம்' படத்தில் நாயகியாக நடித்த பூஜா குமாருக்கு டப்பிங் கொடுத்தார்.

தற்போது ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ள '36 வயதினிலே' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் மீண்டும் அபிராமியும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார்.

நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அபிராமி மிகவும் கிளாமரான உடை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நேற்றைய விழாவிற்கு வந்த பெண்கள் பலரும் புடவை அணிந்து வந்த நிலையில், அபிராமி மட்டும் ஒரு குட்டியான கவுன் அணிந்து வந்திருந்தார்.

அதனால், மற்றவர்களிடமிருந்து அவர் தனித்துத் தெரிந்தார். பொதுவாக ஒரு திரைப்பட விழா என்றால் அதில் நடித்துள்ள நட்சத்திரங்களுக்கு 'டிரஸ் கோட்' சொல்வார்கள்.

அப்படி இந்த விழாவிற்கு எதுவும் சொல்லவில்லையா, அல்லது அபிராமி தன் பக்கம் மற்றவர்களின் பார்வை விழ வேண்டும் என்பதற்காக இப்படி வந்தாரா என்று தெரியவில்லை.....!


Post your comment





Related News
மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி
கமல் படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் அபிராமி!
கவர்ச்சிக்கு மாறிய அபிராமி!
“பெண்கள் பெப்பர் ஸ்பிரே, கத்தியை எப்போதும் எடுத்து செல்லுங்கள்” - அபிராமி ஆலோசனை..!
அபிராமியின் பட வேட்டை!
ஜோதிகா படத்தில் விருமாண்டி அபிராமி
தரமான படங்களுக்கு வரிவிலக்கு: முதல்வருக்கு அபிராமி ராமநாதன் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions