மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி

Bookmark and Share

மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி

விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் அபிராமி. அதன் பிறகும் பல படங்களில் நடித்தவர் திடீரென சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டிலானார். அதன் பிறகு விஸ்வரூபம் படத்திற்கு டப்பிங் குரல் கொடுப்பதன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வேந்தர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார்.

அதன்பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். தற்போது அபிராமி மனோரமா சேனலில் மேட் ஃபார் ஈச் அதர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.

இதுபற்றி அபிராமி கூறியதாவது: எனக்கு தெரிந்து வெளிநாட்டில் ஒளிப்பதிவாகும் முதல் மலையாள ரியாலிட்டி ஷோ இதுதான். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 12 ஜோடிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்குள் விளையாட்டு, அவர்களின் பயண அனுபவம், புரிந்துணர்தல் போன்றவற்றை வெளிக்கொண்டு வரப்பட்டு அதில் சிறந்த ஜோடி ஒன்றை தேர்வு செய்து அவர்களுக்கு கணிசமான தொகை பரிசாக வழங்கப்படுகிறது.

உலகில் மலையாளிகள் அதிகம் வாழும் முக்கிய நாடுகளில் இது நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் மனஓட்டம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

மிகவும் ரசித்து, அனுபவித்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். என்கிறார் அபிராமி. இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 


Post your comment





Related News
கமல் படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் அபிராமி!
கவர்ச்சிக்கு மாறிய அபிராமி!
\'36 வயதினிலே\' கிளாமராக வந்த அபிராமி!
“பெண்கள் பெப்பர் ஸ்பிரே, கத்தியை எப்போதும் எடுத்து செல்லுங்கள்” - அபிராமி ஆலோசனை..!
அபிராமியின் பட வேட்டை!
ஜோதிகா படத்தில் விருமாண்டி அபிராமி
தரமான படங்களுக்கு வரிவிலக்கு: முதல்வருக்கு அபிராமி ராமநாதன் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions