“பெண்கள் பெப்பர் ஸ்பிரே, கத்தியை எப்போதும் எடுத்து செல்லுங்கள்” - அபிராமி ஆலோசனை..!

Bookmark and Share

“பெண்கள் பெப்பர் ஸ்பிரே, கத்தியை எப்போதும் எடுத்து செல்லுங்கள்” - அபிராமி ஆலோசனை..!

மகளிர் தினத்தன்று ஆளாளுக்கு மகளிர் பெருமைகள் விலாவாரியாக பேசினாலும், கருத்துக்களை கூறினாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என தெரியவில்லை.

இந்தநிலையில் மகளிர் தினமான நேற்று நடிகை அபிராமி பெண்களுக்கான ஆலோசனையாக இரண்டு விஷயங்களை முன்வைத்துள்ளார். “எப்போதும் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளவர்களில், பெண்கள் அணியும் ஆடைகளால், அவர்களது நடவடிக்கையால் இன்னும் பல காரணங்களால் தான் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்கிற மனோபாவத்தில் உள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் நினைப்பது தவறு என விளக்குங்கள்.. இதை செய்துவிட்டாலே பலரின் மனோபாவம் மாறக்கூடும்” என மனதளவில் மாற்றம் ஏற்படுத்த சொல்கிறார் அபிராமி.  

அடுத்ததாக, “வெளியில் செல்லும் பெண்கள் தவறாமல் பெப்பர் ஸ்பிரே, பாக்கெட் கத்தி போன்றவற்றை தவறாமல் எடுத்துச்செல்லுங்கள்.. உங்களை பாலியல் ரீதியாக அணுகும் ஆண்களை இவற்றால் தாக்குங்கள், கத்தி கூச்சலிடுங்கள்.. ஏண்டா நம்மை தொட்டோம் என அவன் வாழ்நாளெல்லாம் கதறும்படி அவனுக்கு பாடம் புகட்டுங்கள்” என்றும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ் கொடுத்துள்ளார் அபிராமி.


Post your comment





Related News
மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி
கமல் படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் அபிராமி!
கவர்ச்சிக்கு மாறிய அபிராமி!
\'36 வயதினிலே\' கிளாமராக வந்த அபிராமி!
அபிராமியின் பட வேட்டை!
ஜோதிகா படத்தில் விருமாண்டி அபிராமி
தரமான படங்களுக்கு வரிவிலக்கு: முதல்வருக்கு அபிராமி ராமநாதன் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions