கவர்ச்சிக்கு மாறிய அபிராமி!

Bookmark and Share

கவர்ச்சிக்கு மாறிய அபிராமி!

வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சமஸ்தானம், விருமாண்டி என பல படங்களில் நடித்தவர் அபிராமி. மலையாளத்தில் முன்னணி நடிகையான இவர், 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஆனால், மீண்டும் சினிமா ஆசை அவரை இழுத்து வந்து விட்டது. அதையடுத்து, தனது நடிப்பு தாகத்தை அபிமான டைரக்டர்களிடம் அவர் வெளிப்படுத்தியதை அடுத்து, மலையாளத்தில் 2 படங்களில் நடிக்கும் வாய்ப்பு உடனே கிடைத்து. தொடர்ந்து தமிழுக்கு வந்தவரை ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்துள்ளனர்.

அதுவும் குடும்ப நடிகையான அபிராமியை கவர்ச்சி நடிகையாக களமிறக்கி விட்டுள்ளனர். காரணம், அமெரிக்கா சென்ற பிறகு அவரை அந்த நாட்டு கலாச்சாரம் ஒட்டிக்கொண்டு விட்டதாம்.

அதனால் சாதாரணமாகவே கிளாமர் உடைதரித்து சினிமா வட்டாரங்களில் காட்சி கொடுத்து வந்த அபிராமியிடம், இந்த படத்தில் சற்று கிளாமரான ரோல் என்றதும், இப்போது எனக்கும் அப்படி நடிக்கத்தான் பிடிக்கும் என்று சொல்லி அப்படத்தில் கிளாமர் கலந்த வேடத்தில் நடித்திருக்கும் அபிராமியை தொடர்ந்து கிளாமர் கண்ணோட்டத்தில் சில டைரக்டர்கள் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆக, செகண்ட் இன்னிங்சில் கவர்ச்சி நடிகையாக வலம்வரப்போகிறார் அபிராமி.

 


Post your comment





Related News
மலையாள சேனலில் ஜோடி பொருத்தம் நடத்துகிறார் அபிராமி
கமல் படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் அபிராமி!
\'36 வயதினிலே\' கிளாமராக வந்த அபிராமி!
“பெண்கள் பெப்பர் ஸ்பிரே, கத்தியை எப்போதும் எடுத்து செல்லுங்கள்” - அபிராமி ஆலோசனை..!
அபிராமியின் பட வேட்டை!
ஜோதிகா படத்தில் விருமாண்டி அபிராமி
தரமான படங்களுக்கு வரிவிலக்கு: முதல்வருக்கு அபிராமி ராமநாதன் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions