அபிஷேக் - சல்மான் மோதல் தவிர்ப்பு

Bookmark and Share

அபிஷேக்  - சல்மான் மோதல் தவிர்ப்பு

அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ஆல் இஸ் வெல் படம், வரும் ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அபிஷேக் பச்சனின் ஆல் இஸ் வெல் மற்றும் சல்மான் கானின் ஹீரோ படம், ஒரே நாளில் வெளியாகி முட்டி மோதிக்கொள்ளும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆல் இஸ் வெல் படத்தில், அபிஷேக் பச்சன், அசின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹீரோ படத்தில் சல்மான் கான், சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆல் இஸ் வெல் மற்றும் ஹீரோ படங்கள், ஜூலை 3ம் தேதிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில், ஆல் இஸ் வெல் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது, சல்மான் கான் எனது இனிய நண்பர்.

ஆல் இஸ்  வெல் படத்திற்காக, இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்ற நிலை உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்தாலும் கூட, ஜூலை 3ம் தேதிக்கு படத்தை வெளியிட மாட்டோம் என்று பூஷன் குமார் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions