ஐஸ்வர்யா ராயின் படத்தை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட அபிஷேக் பச்சன்

Bookmark and Share

ஐஸ்வர்யா ராயின் படத்தை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அசினுடன் இணைந்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ஆல் ஈஸ் வெல்’. இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அபிஷேக் பச்சன், சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது மனைவி, நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஜஸ்பா’ படத்தில் அவர் அருமையாக நடித்துள்ளதாக கூறினார்.

ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘ஜஸ்பா’ ஒரு திகில் படம். இயக்குனரும், ஐஸ்வர்யா ராயும் தங்களது வழக்கமான பாணியில் இருந்து மாறி, புதிய கோணத்தில் இப்படத்தை எடுத்திருப்பதாக அபிஷேக் பச்சன் கூறினார்.

மேலும், இதில் வக்கீல் வேடத்தில் நடித்திருக்கும், ஐஸ்வர்யா ராய் இதுவரை அவர் நடித்திருந்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு புதிய அம்சங்களுடன் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.    

‘ஜஸ்பா’ படத்தில் தேசிய விருது பெற்ற புகழ்பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ ‘லைப் ஆப் பை’ போன்ற படங்களின் மூலம் புகழடைந்த இர்பான் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions