விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு

Bookmark and Share

விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக சினிமாவுக்கு முழுக்கு போட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவரது மகன் சண்முகபாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது அவரது மகன் நடிக்கவிருக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும் விஜயகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் நேற்று விஜயகாந்தை திடீரென்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். விஜயகாந்தை மட்டுமல்லாது, அவரது மகன்களான பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரையும் அபிஷேக் பச்சன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அபிஷேக் பச்சன் தற்போது சென்னை கால்பந்து அணியின் பங்குதாரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சோகத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக். ப்ரோகிராம் கேன்சல்
அபிஷேக், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை- காரணம் இவர்தானா?
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!
ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் கருத்து வேறுபாடு?
வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்!
ஐஸ்வர்யா ராயின் படத்தை பெருமையுடன் பகிர்ந்துகொண்ட அபிஷேக் பச்சன்
ஆல் இஸ் வெல் டிரைலர் விரைவில் வெளியீடு
திருமண நாளை கொண்டாட முடியாத அபிஷேக்-ஐஸ்வர்யா
மனைவியின் படத்தில் அபிஷேக் பச்சன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions