ஆல் இஸ் வெல் டிரைலர் விரைவில் வெளியீடு

Bookmark and Share

ஆல் இஸ் வெல் டிரைலர் விரைவில் வெளியீடு

உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல் இஸ் வெல் படத்தின் டிரைலர், இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜோயா அக்தரின் தில் தடக்னே டூ படத்துடன், ஆல் இஸ் வெல் படத்தின் டிரைலர் வெளியிடப்படுவதாக இருந்தது.

ஆனால், கடைசிநேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. ஆல் இஸ் வெல் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் இதுகுறித்து கூறியதாவது, படம் சிறப்பாக வந்துள்ளது. அதேபோல், படத்தின் டிரைலரையும் சிறப்பான முறையில் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.

சோனாக்ஷியின் நடனம் குறித்த காட்சிகளை, டிரைலரில் இணைக்க உள்ளோம். மேலும் படத்தில் நடித்தவர்கள் தற்போது படத்தின் டப்பிங் உள்ளி்ட்ட பணிகளில் பிஸியாக உள்ளதால், டிரைலர் இன்னும் முழுமைபெறவில்லை. இம்மாத இறுதியில், டிரைலரை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions