கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!

Bookmark and Share

கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்..

ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.மதுரை தமுக்கத்தில்  நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டதோடு,

அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.. நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும், அந்நிய குளிர்பானங்களை எதிர்த்து தாமிரபரணீயில் நடந்த போராட்டமாகட்டும்,

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுகொல்லப்பட்டபோது நடந்த போராட்டம்  என அனைத்து போராட்டங்களிலும்  அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடியும்.டில்லியில் மாதக்கணக்கில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்காக இங்கிருந்து எந்த ஒரு பெரிய நடிகரும் வாய் திறக்க யோசித்த

நிலையில், அந்த விவசாயிகளுடன் விவசாயியாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக  கலந்துகொண்டு தனது ஆதரவை அளித்தவர் தான் அபி சரவணன். பின்னர் அந்த போராட்டத்தின்போது உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு திரையுலகினர் மூலமாக நிதியுதவியும் கூட பெற்றுத்தந்தார்.

மே-18  என்பது தமிழீழத்தில் உயிரிழந்த நமது தமிழினத்திற்கு அஞ்சலி செலுத்தும் நாள்.. தற்போது இயக்குனர் சுபீர் இயக்கிவரும் "பிரிட்டிஷ் பங்களா" என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகனாக  நடித்து வரும் அபி சரவணன் அங்குள்ள படக்குழுவினரோடு சேர்ந்து உயிர் நீத்த நம் ஈழத்து சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அங்கு படப்படிப்பு தளத்தில் இருந்தவர்களில் அபி சரவணனை தவிர மற்ற அனைவரும் மலையாளிகள்... ஆனால் மனதால் ஒன்றுபட்டு அபி சரவணனின் வேண்டுகோளை ஏற்று மெழுகு ஏந்தி  அஞ்சலி செலுத்தினர் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.


Post your comment

Related News
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
16ம் தேதி முதல் படங்களை ஓட்டுவோம் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions