பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கிறேன்: அபிஷேக் பச்சன் பேட்டி

Bookmark and Share

பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கிறேன்: அபிஷேக் பச்சன் பேட்டி

அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘ஆல் இஸ் வெல்’ படத்தோல்விக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹவுஸ்புல்–3’. இதில் அபிஷேக் பச்சனுடன் ரித்தேஷ்முக், அக்சய்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் நடித்த அனுபவங்களை அவர் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பிரபல நடிகர்களின் வாரிசு என்பதால் எளிதாக வெற்றி பெற முடியுமா என்று கேட்கப்பட்டது. பதில் அளித்த அபிஷேக்பச்சன்...

“பிரபல நடிகர்களின் வாரிசு என்றால் அவர்கள் வெற்றி பெற முடியும் என்பது தவறான கண்ணோட்டம். யார் என்றாலும் திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பிரபல நடிகர்களின் வாரிசுகள் மட்டுமல்ல, மற்ற நடிகர்களுக்கும் இது பொருந்தும். திறமைதான் வெற்றியை தரும். படங்கள் தோல்வியாக அமைந்தால் அவர்களுக்கு படவாய்ப்பு கிடைப்பது சிரமம்தான்.

இன்றைக்கு என்னைப் பாருங்கள். பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கிறேன். தோல்வி படத்தை கொடுக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஒவ்வொரு நடிகரும் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறார்கள். அதில் சிலருக்கு வெற்றி கிடைக்கிறது. சிலருக்கு தோல்வி கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
தளபதி விஜயை இழிவாக விமர்சித்த பிரபல இயக்குனர், கொதிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தமிழக அரசியல் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தங்கர்பச்சான்
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
ரஜினிகாந்த் இப்போது அரசியலில் இறங்கவேண்டாம்! அமிதாப் பச்சன்
மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும்: தங்கர்பச்சான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions