ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பிடிக்கும்: அபிஷேக்பச்சன் நம்பிக்கை

Bookmark and Share

ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பிடிக்கும்: அபிஷேக்பச்சன் நம்பிக்கை

பழம் பெருமை வாய்ந்த கபடி விளையாட்டு புரோ கபடி லீக் போட்டியால் புதிய பரிணாமத்தை பெற்று இருப்பதுடன், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. ஐ.பி.எல். பாணியில் நடைபெறும் 3-வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) போட்டி வருகிற 30-ந் தேதி முதல் மார்ச் 5-ந் தேதி வரை 8 நகரங்களில் நடக்கிறது. 

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் யு மும்பை, 2014-ம் ஆண்டு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டான், பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

வருகிற 30-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் யு மும்பை-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.3-வது புரோ கபடி லீக் போட்டியின் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. 

இதில் சர்வதேச கபடி பெடரேஷன் தலைவர் ஜனார்த்தன்சிங் கெலாட், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான அபிஷேக்பச்சன், மும்பை அணியின் கேப்டன் அனுப்குமார், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் கேப்டன் நவ்னீத் உள்பட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசனில் உள்ளூர் வீரர்களுடன் 11 நாடுகளை சேர்ந்த 26 சர்வதேச வீரர்கள் பங்கேற்கிறார்கள். அறிமுக நிகழ்ச்சிக்கு பிறகு இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

கபடி ஏறக்குறைய 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டாகும். இந்திய புராணங்களிலும் கபடி இடம் பெற்றுள்ளது. கபடி இந்தியாவில் தோன்றிய விளையாட்டாகும்.

இந்த விளையாட்டை பிரபலப்படுத்த எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறோம். 1990-ம் ஆண்டு முதல் நமது அணி தான் ஆசிய விளையாட்டு போட்டியில் சாம்பியனாக விளங்கி வருகிறது. 

தற்போது ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஒலிம்பிக் போட்டியில் ஒரு விளையாட்டு இடம் பெற வேண்டும் என்றால் அந்த விளையாட்டு குறைந்தபட்சம் 55 நாடுகளிலாவது விளையாடப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.

தற்போது 18 ஆசிய நாடுகள் உள்பட 31 நாடுகளில் கபடி விளையாடப்பட்டு வருகிறது. புரோ கபடி லீக் மூலம் அதிக ரசிகர்களை கவர்வதுடன், கபடி விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை 55 ஆகவும் உயர்த்த முடியும் என்று நம்புகிறேன். 


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது
ரன்பிர்சிங்கை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்
பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கிறேன்: அபிஷேக் பச்சன் பேட்டி
திரையுலகில் 46 ஆண்டுகள் நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்
சின்னத்திரையில் காணமல் போன அபிஷேக் வெள்ளித்திரையில் பிசி..!
ஐஸ்வர்யா ராயிற்கு ஜோடி நானா : மறுக்கும் அபிஷேக்!
பாலிவுட்டில் ஷாருக், அபிஷேக்குடன் இணையும் பிருத்திவிராஜ்.
பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான அச்சப்பன் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions