மிஸ்டர் இந்திய மினி வில்லன் இப்போது மோகன்லாலின் வலதுகை

Bookmark and Share

மிஸ்டர் இந்திய மினி வில்லன் இப்போது மோகன்லாலின் வலதுகை

மலையாள நடிகரான அபுசலீம், இவர் ஒரு மினி வில்லன் நடிகர்தான். மெயின் வில்லனுக்குத் துணையாக படம் முழுவதும் வரும் சைடு வில்லன்.  அதாவது இரண்டாம் நிலை வில்லன். இப் பிரிவு எல்லா மொழிப்படங்களிலும் இருக்கிறது.

தமிழ்சினிமா ரசிகர்கள் விக்ரம் நடித்த மஜா படத்தில் வில்லன் பிஜூமேனனின் அடியாளாக வரும் இவரை பார்த்திருக்க முடியும். இப்போது லோஹம் படத்தில் மோகன்லாலின் வலது கையாக பாசிட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார்.

இது ஆக்சன் படம் இல்லை என்று இயக்குநர் ரஞ்சித்தும் மோகன்லாலும் மழுப்பலாக பேசி வந்தாலும், இது ஒரு நான்ஸ்டாப் ஆக்சன் படம் என்று அபுசலீம் கூறுகிறார்.

இயக்குநர் கேட்டதற்கிணங்க இந்தப்படத்தில் இவர் பிரெஞ்சு டைப்பில் தாடி மற்றும் மொட்டைத் தலையுடன் வருகிறார். ஹாலிவுட் பட ராக் போல ஏறக்குறைய ஆகிவிட்டேன் என்கிறார் அபுசலீம். 

இரண்டுமுறை மிஸ்டர் இந்தியா மற்றும் மிஸ்டர் சௌத் இந்தியா பட்டங்களை வென்ற அபுசலீம், இருபது வருடங்களுக்கு முன்னரே சிக்ஸ் பேக்கேல்லாம் வைத்து அசத்திய இவர்  விக்ரமின் பல வருட நெருங்கிய நண்பரும் கூட.

விக்ரமின்  மலையாள படங்களில் அபுசலீம் தொடர்ந்து நடித்துள்ளார். இன்றும் தொடரும் அந்த நட்பின் பொருட்டே பட விழாவுக்கு அர்னால்ட் வருவதாக அபுசலீமுக்கு முன்கூட்டியே விக்ரம் தகவல் சொல்ல, சென்னை வந்து தனது மானசீக குருவான அர்னால்டை சந்தித்து சென்றார் அபுசலீம். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions