அச்சம் என்பது மடைமையடா டிரெய்லர் வெளியீடு..கொண்டாடும் ரசிகர்கள்!

Bookmark and Share

அச்சம் என்பது மடைமையடா டிரெய்லர் வெளியீடு..கொண்டாடும் ரசிகர்கள்!

பீப் பாடல் விவகாரத்தால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் மூலம் மீண்டு வந்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லர் வெளியானது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் இருவரும் இணையும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் சிம்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

காதல், ஆக்ஷன் என்று விண்ணைத்தாண்டி வருவாயா பாணியில் இருந்தாலும் கவுதம் மேனன், தாமரை, ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படமும் ஒரு பிளாக்பஸ்டராக மாறும் என்று கூறுகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு சிம்பு தனது ரசிகர்களுக்கு அளித்திருக்கும் இந்த டிரெய்லர் சிம்புவை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததாக அவரது ரசிகர்கள் #strisback என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

வெளியான குறைந்த நேரத்தில் 1 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் பெற்றிருக்கிறது. மொத்தத்தில் இந்த புத்தாண்டு சிம்புவிற்கு திருப்புமுனையாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Post your comment





Related News
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
அமராவது ஆற்றுக்கு நேர்ந்த கொடுமையைப் பேசும் 'அச்சமில்லை அச்சமில்லை'!
கல்வி முறை மேல் கல் எறியும் இன்னொரு சினிமா ‘அச்சமின்றி!’ - படம் எப்படி?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions