தலைப்பு மாற்றியது ஏன்? அச்சமின்றி இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

தலைப்பு மாற்றியது ஏன்? அச்சமின்றி இயக்குனர் விளக்கம்

என்னமோ நடக்குது படத்துக்கு பிறகு விஜய்வசந்த் நடிக்கும் படம் அச்சமின்றி. அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார், பிரேம்ஜி இசை அமைக்கிறார். சரண்யா, கருணாஸ், தேவதர்ஷினி நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு முதலில் சிகண்டி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அச்சமின்றி என மாற்றி இருக்கிறார்கள்.

அது ஏன் என்பது பற்றி இயக்குனர் ராஜபாண்டி அளித்த விளக்கம் வருமாறு: 

கல்வி துறையில் நடக்கும் முறைகேடுகளை சொல்லும் படம். எந்த மாதிரி கல்வி நாட்டுக்கு தேவை என்பதை சொல்லும் ஆக்ஷன் த்ரில்லர். படத்திற்கு முதலில் சிகண்டி என்று பெயர் வைத்திருந்தோம். சிகண்டி என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு கேரக்டரின் பெயர்.

திருநங்கையாக இருந்து பின்பு ஆணாக மாறும் கேரக்டர். இந்த தலைப்பு திருநங்கைகளை குறிக்கிறது. ஹீரோ திருநங்கையாக நடிக்கிறாரா என்ற பல சந்தேகங்களை எழுப்பினார்கள். மகாபாரத கதையை முழுமையாக அறிந்தவர்களால் மட்டுமே சிகண்டி கேரக்டர் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

எல்லோரும் மாகாபாரத்தை முழுமையாக படித்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு சிகண்டி பற்றி அதிக புரிதல் இருக்காது என்பதால் படத்தின் தலைப்பை அச்சமின்றி மாற்றினோம்.

அச்சமின்றி சிலர் செய்யும் தவறுகளை மக்கள் அச்சமின்றி எதிர்க்க வேண்டும் என்கிற கருத்தையும் கதை வலியுறுத்துவதால் இந்த தலைப்பும் பொருத்தமானதுதான். என்கிறார் ராஜபாண்டி.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions