அச்சாரம் கதை என்னுடையது: துணை இயக்குனர் பரபரப்பு புகார்

Bookmark and Share

அச்சாரம் கதை என்னுடையது: துணை இயக்குனர் பரபரப்பு புகார்

தாருஷா மூவீஸ் சார்பில் ஞானதேஷ் அம்பேத்கார், ஏ.சங்கரபத்மா தயாரிக்கும் படம் அச்சாரம். இதில் கணேஷ் வெங்கட்ராம், முன்னா, பூனம் கவுர், ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்கள். மோகன் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.

தற்போது இந்த படத்தின் கதை என்னுடையது கதையை திருடியதோடு என்னையும் மிரட்டுகிறார்கள் என்று விருகம்பாக்கத்தை சேர்ந்த எம்.சி.சேகர் என்ற துணை இயக்குனர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளேன். கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை என்ற தலைப்பில் நான் இயக்குவதற்காக ஒரு கதை தயார் செய்தேன். அதனை 2010ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

எனது இந்த கதையின் விவாதத்தில் கலந்து கொண்டவர் மோகன் கிருஷ்ணன். நான் என் கதையை விஜய் சேதுபதி நடிப்பில் படமாக எடுக்க முயற்சித்தபோதுதான். எனது கதையை திருடி மோகன் கிருஷ்ணன் அச்சாரம் என்ற படத்தை எடுத்து வருவதை அறிந்தேன்.

இதற்காக அவரிடம் நியாயம் கேட்டு போனபோது அவரும், தயாரிப்பாளர் ஞானதேஷ் அம்பேத்காரும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions