அச்சாரத்துக்கு யூ தர மறுத்த தணிக்கை குழு

Bookmark and Share

அச்சாரத்துக்கு யூ தர மறுத்த தணிக்கை குழு

கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடித்துள்ள படம் அச்சாரம். பூனம் கவுர், முன்னா, ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஞானதேஷ் அம்பேத்கர் தயாரித்துள்ளார், மோகன கிருஷ்ணன் இயக்கி உள்ளார். படம் வருகிற 19ந் தேதி வெளிவருகிறது.

படத்துக்கு யூ சான்றிதழ் கேட்டு தயாரிப்பாளர் போராடியும் தணிக்கை குழு தரவில்லை.  இதுகுறித்து இயக்குனர் மோகன கிருஷ்ணன் கூறியதாவது: காதல் வந்தால் அதனை பெற்றவர்களிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

கடைசி வரை மறைப்பதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிற படம் இது. திருமணத்துக்கு முதல்நாள் காதலுடன் ஓடிப்போகும் ஒரு பெண்ணின் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைதான் படம். அதனால் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் நிலை என்ன ஆகும். அவன் கனவுகள் ஒரே நாளில் சிதைந்தால் அவன் என்ன ஆவான் என்பதை சொல்கிறேன்.

ஆபாச காட்சிகளோ, வசனங்களோ படத்தில் கிடையாது, இருந்தாலும் மார்பு தெரிகிறது, தொப்புள் தெரிகிறது என்று சொல்லி 12 கட் கொடுத்து யு/ஏ கொடுத்தார்கள். 12 கட்டுகளையும் சரிசெய்து விட்டு டிரிபியூனலுக்கு சென்றோம். முதலில் படம் பார்த்தவர்களே டிரிபியூனலிலும் பார்த்தார்கள். படத்தின் கதைக்கு யு/ஏ தான் என்றார்கள். எங்களால் அதற்கு மேல் அவர்களை எதிர்த்து போராடமுடியவில்லை. அதனால் யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிடுகிறோம். என்றார் இயக்குனர் மோகன கிருஷ்ணன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions