உலக தமிழ் நடிகை ஆச்சி மனோரமா - சில குறிப்புக்கள்!

Bookmark and Share

உலக தமிழ் நடிகை ஆச்சி மனோரமா - சில குறிப்புக்கள்!

எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்ற மனோரமா பல மொழி படங்களில் நடித்தது  மட்டும் அன்றி பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழ் சக நடிகர்களுடனும் நடித்து அவர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் இருந்துள்ளார். 

இவ்வாறு 2000 ஆண்டு 3 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்று சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக ஒரு தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்திருந்தார்.  “சினேகிதியே. சினேகிதியே.” என்ற பெயரில் வெளிவந்த அதனை சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி தயாரித்திருந்தது. 

கேசி கலைச்செல்வன், விக்னேஸ்வரி, ஜெய்னேஷ், ரே. சோமசுந்தரம் என சிங்கப்பூரின் பல முன்னணி தொலைக்காட்சி நடிகர்கள் நடித்திருந்தார்கள். 

இந்தப் படத்தை காத்திருக்க நேரமில்லை திரைப்படத்தை இயக்கிய குலோத்துங்கள் இயக்கியிருந்தார். ரொரன்டோ எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான "கனடா மூர்த்தி" இத்திரைப்படத்திற்கு க‌தை, வசனம் எழுதியிருந்தார். 

ஒரு நகைச்சுவைப் படமாக உருவான இதில் இலங்கை பாப் பாடலான “சின்ன மாமியே..” என்ற பாடலுக்கு மனோரமா டிஸ்‌கோ டான்ஸ் ஆடிக் கலக்கியிருப்பார் .

இதில் மனோரமா இராணுவ சீருடையிலும் வருகிறார்,  இராணுவ உடையில் பார்த்துவிட்டு யாரும் பயந்துவிடாதீர்கள். இது இப்படத்தில் வரும் ஒரு நிமிட கனவுக் காட்சி மட்டுமே.

 


Post your comment





Related News
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை திரைக்கு வரும் பாலாவின் நாச்சியார்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions